Wednesday, May 31, 2006

ஒலிபரப்பு நேரம்

ஒலிபரப்பு நேரம்
cri
இந்திய நேரம் இரவு 7:30-8:30
பெய்சிங் நேரம் இரவு 22:00-23:00
சிற்றலை 31.04 மீட்டர்----9665 கி.உறர்ட்ஸ்
25.67 மீட்டர்----11685 கி.உறர்ட்ஸ்
இந்திய நேரம் இரவு 8:30-9:30
பெய்சிங் நேரம் இரவு 23:00-24:00
சிற்றலை 25.42 மீட்டர்-11800 கி.உறர்ட்ஸ்
36.31 மீட்டர்-9490 கி.உறர்ட்ஸ்
இந்திய நேரம் காலை 7:30-8:30
பெய்சிங் நேரம் காலை 10:00-11:00
சிற்றலை 25.27 மீட்டர்----11870 கி.ஹர்ட்ஸ்
21.87 மீட்டர்----13715 கி.ஹர்ட்ஸ்
22.04 மீட்டர்----13610 கி.ஹர்ட்ஸ்
இந்திய நேரம் காலை 8:30-9:30
பெய்சிங் நேரம் காலை 11:00-12:00
சிற்றலை 22.06 மீட்டர்----13600 கி.ஹர்ட்ஸ்
21.84 மீட்டர்----13735 கி.ஹர்ட்ஸ்

தமிழ் நண்பர்களே வாருங்கள்

நிகழ்ச்சி நிரல்
cri
திங்கள்:செய்திகள், செய்தித்தொகுப்பு, மக்கள் சீனம், சீன சமூக வாழ்வு, சீன மகளிர், சீன உணவு அரங்கம், தமிழ் மூலம் சீனம்
செவ்வாய்:செய்திகள், செய்தித்தொகுப்பு, சீனப் பண்பாடு, சீனக் கதை, மலர்ச் சோலை, தமிழ் மூலம் சீனம்
புதன்:செய்திகள், செய்தித்தொகுப்பு, கேள்வியும் பதிலும், நேயர் நேரம், நேருக்கு நேர், தமிழ் மூலம் சீனம்
வியாழன்:செய்திகள், செய்தித்தொகுப்பு, அறிவியல் உலகம், நலவாழ்வுப் பாதுகாப்பு, சீனாவில் இன்ப பயணம், தமிழ் மூலம் சீனம்
வெள்ளி:செய்திகள், செய்தித்தொகுப்பு, உங்கள் குரல், நட்பு பாலம், சீனாவுக்கு அப்பால்
சனி:சீனத் தேசிய இனக் குடும்பம், நேயர் கடிதம், இசை நிகழ்ச்சி, தமிழ் மூலம் சீனம்
ஞாயிறு:விளையாட்டுச் செய்திகள், நேயர் விருப்பம்

Tuesday, May 30, 2006

தமிழ் மூலம் சீன மொழி கற்க



<>தமிழ் மூலம் சீனம்<>

பாடம் 1

சீன மொழி பல்லாயிரம் ஆண்டு வரலாறுடையது.

உலகில் கோடானுகோடி மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

உலகில் நால்வரில் ஒருவர் சீனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகமான வெளிநாட்டவர் சீனாவுக்கு வந்து பயணம் மேற்கொள்கின்றனர் அல்லது வணிகம் செய்கின்றனர்.

சீன மொழி கற்க, இங்கு வருகை தரும் தமிழர்களை வரவேற்கின்றோம்.

முதலாவது பாடம்.


தலைப்பு 问 候 (WEN HOU) வென் ஹவ்.....என்பதாகும்.

தமிழ் மொழியில் வணக்கம் தெரிவிப்பது என்று பொருள்.

சீன வழக்கத்தின் படி, இருவர் சந்திக்கும் போது,

ஒருவருக்கொருவர்你好(NI HAO) நி ஹெள... என்று கூறுவர்.

你 (NI) நி.... என்றால் தமிழில் (நீ) என்பது பொருள்.

好 (HAO)ஹெள.... என்றால் நன்று என்று பொருள்.

இதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எவரும் பயன்படுத்தலாம்.

你好 (NI HAO)நி ஹெள என்று ஒருவருக்குச் சொல்லும் போது,

எதிர் தரப்பினரும் 你好(NI HAO) நி ஹெள.... என்று பதிலளிப்பார்.

தமிழரும் இப்படி தானே?

இருவர் சந்திக்கும் போது, பரஸ்பரம் வணக்கம் தெரிவிப்பது வழக்கம் அல்லவா?

இப்பொழுது நீங்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்,

你好 (NI HAO) நி ஹெள......

சீன மக்கள் காலத்தை குறிப்பிட்டு வணக்கம் தெரிவிப்பது உண்டு.

எடுத்துக்காட்டாக, காலையில் 早上好 (ZAO SHANG HAO)என்று கூறுவர்.

தெள ஷாங் ஹெள.........

早上 (ZAO SHANG)

தெள ஷாங் ஹெள.....என்றால் காலை என்பது பொருள்.


இப்பொழுது எங்களுடன் சேர்ந்து படியுங்கள். 早上好(ZAO SHANG HAO)

தெள ஷாங் ஹெள......!


முற்பகல் 上午好 (SHANG WU HAO) ஷாங் வு ஹெள என்று கூறுவர். 上午

(SHANG WU) ஷாங் வு...... என்றால் முற்பகலைக் குறிக்கும்.


இப்பொழுது எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.


上午好 (SHANG WU HAO) ஷாங் வு ஹெள...!


இப்பொழுது மீண்டும் படிப்போம். ஷாங் வு ஹெள...!


முதலில் 你好(NI HAO) என்பதை படிக்கின்றோம்.


你好(NI HAO) நி ஹெள...!


இதில் 你(NI), 好(HAO), ஆகிய இரண்டு சொற்கள் நமக்குத் தெரியும்.


அடுத்து, 早上好(ZAO SHANG HAO) என்பதைப் படிக்கின்றோம்.

தெள ஷாங் ஹெள


早上好(ZAO SHANG HAO): இதில் 早上(ZAO SHANG) என்பது நமக்குப் புரிகிறது.


இனி,上午好(SHANG WU HAO) என்பதைப் படிக்கின்றோம், 上午好(SHANGWU HAO): ஷாங் வு ஹெள...!இதில் 上午(SHANGWU) என்பதை தெரிந்து கொண்டோம்.


ஆக, இன்று 4 சொற்களைத் தெரிந்துகொண்டோம்.

அவை, 你(NI)-நீ

好(HAO)-ஹவ்-நன்று

早上(ZAO SHANG)-தெள ஷாங் - காலை

上午(SHANG WU)-ஷாங் வு - முற்பகல்

இந்த 4 சொற்களும், உங்கள் மனதில் பதிந்திருக்கின்றனவா.

பாடத்துக்குப் பின் அதிக முறை பயிற்சி செய்யுங்கள்.

இந்த நிகழ்ச்சி பற்றி யோசனை தெரிவிக்க விரும்பினால் விண்ணஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தாராளமாகத் தெரிவியுங்கள். மீண்டும் சந்திப்போம்.

மின்னஞ்சல் :- tamil@cri.com.cn

விண்ணஞ்சல் :-

China Radio International.

16A Shijingshan Road, Beijing, China. 100040

<> CRI. All Rights Reserved <> தொடரும்.....

Monday, May 29, 2006

சீன-இந்திய அமைச்சர்கள் சந்திப்பு


<>சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு<>

இந்தியாவுடனான நட்புப்பூர்வமான அண்டை நாட்டு
ஒத்துழைப்புறவை வளர்ச்சியுறச் செய்வதில் சீனா
மிகவும் கவனம் செலுத்துகின்றது,

இரு நாடுகளின் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி
உறவை முழுமையாகவும் ஆழமாகவும் வளர்க்க சீனா
விரும்புகின்றது என்று சீன வெளியுறவு அமைச்சர்
லீ சௌ சிங் கூறியுள்ளார்.

இன்று பெய்சிங்கில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
பிரணாப் முகர்ஜிஐச் சந்தித்துரையாடிய போது அவர்
இவ்வாறு கூறினார்.

சீனாவும் இந்தியாவும் நீண்ட வரலாற்று நாகரீகமுடைய
நாடுகளாகும். இரு நாடுகளின் மொத்த மக்கள் தொகை,
உலக மக்கள் தொகையில் சுமார் 30 விழுக்காடு வகிக்கின்றது.

இருநாடுகளும் வளர்ந்து செல்வமடைந்தால், மனிதகுலத்துக்கு
மாபெரும் பங்காற்றும் என்றார் லீ சௌ சிங். இந்தியாவும்
சீனாவும் நல்ல நண்பர்கள்.

பல பிரச்சினைகளில் இரு நாடுகள் ஒத்த அல்லது நெருங்கிய கருத்துக்களைக் கொண்டுள்ளன. இந்தியாவும் சீனாவும்
ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சர்வதேச விவகாரங்களில்
ஆக்கப்பூர்வமாக பங்கு கொள்வது என்பது, உலக சமாதானத்தைப் பேணிக்காத்தல், உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

சீனத் தரப்புடன் கூட்டு முயற்சி மேற்கொண்டு, இரு நாடுகளின் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் அதிகரித்து, இரு தரப்புறவின் வளர்ச்சியை மேலும் தூண்ட இந்தியா விரும்புகின்றது என்றும் அவர் கூறினார்.

செய்திகள்

சீனாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் 2 கோடி பேர்...!

பெய்ஜிங், மே 29: சீனாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை 25 கோடியில் இருந்து 2 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக சீன துணை அதிபர் ஹுயி லியாங்யூ கூறியுள்ளார்.

பெய்ஜிங் நகரில் நடைபெற்ற வறுமை ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கில் சீன துணை அதிபர் ஹுயி லியாங்யூ உரையாற்றினார். அவர் கூறியது:

வறுமை ஒழிப்பு, சீனாவுக்கு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது.

கிராமப்புறங்களில் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வறுமைக்
கோட்டுக்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள். எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வறுமைக்கு எதிராக சீனா கடுமையாகப் போராடவேண்டியுள்ளது.

இதற்காக வறுமை ஒழிப்பில் பங்கேற்குமாறு வர்த்தகம் உள்ளிட்ட பிற துறையினரை அரசு ஊக்குவிக்கும். மேலும் அரசு சார்பிலும் அதிக நிதி ஒதுக்கப்படும் என்றார்.

1986ல் இருந்து சீனா வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

சீனாவில் 1978ல் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்தவர்கள் 25 கோடி பேர். இது 2004ல் 2 கோடியே 60 லட்சமாகக் குறைந்தது. இக் காலகட்டத்தில் மொத்த கிராமப்புற மக்களில் பரம ஏழைகளின் சதவிகிதம் 30.7 ல் இருந்து 3.1 ஆகக் குறைந்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது.

Sunday, May 28, 2006

முக்கிய தொலைபேசி எண்கள்

<>முக்கிய தொலைபேசி எண்கள்<>


சீன வானொலி நிலைய தமிழ்ப் பிரிவு 68892363

சீனாவிலுள்ள இந்திய தூதரகம் 65321908

தீயணைப்பு அலுவலகம் 119


காவல் நிலையம் 110


அவசர மருத்துவ சேவை 120

சிறப்பு பரிசு நேயர் எஸ் எம் ரவிச்சந்திரன்



























சிறப்பு பரிசு நேயர் எஸ் எம் ரவிச்சந்திரன்
அவர்களின்
சீன சுற்று பயணம்...!

நிலத் தோற்றமும் நிலவமைப்பும்

<>நிலத் தோற்றமும் நிலவமைப்பும்<>

மலைகள் நிறைந்த நாடு சீனா. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மலைப் பிரதேசத்தின் பரப்பளவு 3ல் 2 பகுதியாகும்.

மலைப் பிரதேசம் குன்றுப் பிரதேசம் பீடபூமிகள் ஆகியவை இதில் அடங்குகின்றன. நாட்டி பல்வேறு நிலவமைப்புகளில் மலைப் பிரதேசம் 33 விழுக்காடும் பீடபூமி 26 விழுக்காடும் வடி நிலம் 19 கிழுக்காடும் சமவெளி 12 விழுக்காடும் குன்றுகள் 10 விழுக்காடும் வகிக்கின்றன.

இலட்சகணக்கான ஆண்டுகளுக்கு முன் சிங்காய்-திபெத் பீடபூமி மேலோங்கி எழுந்துள்ளது. பூகோளத்தின் வரலாற்றில் உருவான நில மேலோட்டின் இயக்கத்தினால் சீனாவின் நிலத் தோற்றம் உருவாயிற்று.

ஆகாயத்திலிருந்து சீனாவின் நிலத்தைப் பார்த்தால் அது படிக்கட்டு போல மேற்கிலிருந்து கிழக்காகப் படிப்படியாக கீழ் நோக்கி இறங்குகின்றது.
இந்தியத் துணைக் கண்டமும் ஐரோப்பிய ஆசிய கண்டமும் மோதுவதால் சிங்காய்-திபெத் பீடபூமி இடைவியாமல் மேலோங்கி வளர்கின்றது.

அது கடல் மடத்திலிருந்து சுமார் 4 ஆயிரம் மீட்டர் உயரமுடையது.
“உலகின் கூரை”எனவும் அது அழைக்கப்படுகின்றது. இது சீனாவின் நிலவமைப்பின் முதலாவது படிக்கட்டாகத் திகழ்கின்றது.

பீடபூமியில் உள்ள இமயமலையின் முக்கிய மலைச் சிகரமான
ஜொல்மோ லுங்மா(எவஹஸ்ட்)8848.13 மீட்டர் உயரமுடையது.
அது உலகில் மிக உயர்ந்த மலைச்சிகரமாகும்.

உள் மங்கோலிய பீடபூமி லோயெஸ் பீடபூமி யுன்னான் குய்ச்சோ பீடபூமி தலிம் வடிநிலம் செங்கல் வடிநிலம் சுசுவான் வடிநிலம் ஆகியவை சீனாவின் இரண்டாவது படிக்கட்டாக அமைகின்றது.

இவை கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1000-2000 மீட்டர் உயரத்தில் உள்ளன. இதன் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ள பெரிய சின் அன் மலைகள், தைய்ஹொன் மலைகள், ஊ சான் மலைகள், சியூ பொங் மலைகள் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு நோக்கி பசிபிக்மாக் கடல் கரையோரம் வரையான பகுதி அதன் மூன்றாவது படிக்கட்டாகும்.

இதன் நிலவமைப்பு கடல் மட்டத்திலிருந்து 500-1000 மீட்டர் உயரம் உடையது. வடக்கிலிருந்து தெற்காக வடகிழக்கு-சீன சமவெளி, வட சீன சமவெளி, யாங்சி ஆற்றின் நடுத்தர மற்றும் கீழ்ப் பகுதி சமவெளி இச்சமவெகளின் அருகில் தாழ்வான மலைகளும் குன்றுகளும் பரந்து கிடக்கின்றன.

மேலும் கிழக்கு நோக்கிச் சென்றால் சீனாவின் பெருங்கண்டக் கடல் திட்டில் அமைந்துள்ள ஆழமற்ற கடல் பிரதேசத்தைக் காணலாம். 4 படிக்கட்டாக விளங்கும் இப்பிரதேசத்தின் நீர் ஆழம் 200 மீட்டர் மட்டுமே.

<>கடலோரமும் தீவுகளும்<>

<>கடலோரமும் தீவுகளும்<>

சீனாவின் கடலோரம் வடக்கில் லொனின் யாலு ஆற்று முகத் துவாரத்திலிருந்து தொடங்கி தெற்கில் குவான் சியின் பெய்லுன் ஆற்றும் முகத்துவாரம் வரை செல்கின்றது.

மொத்த நீளம் 18 ஆயிரம் கிலோமீட்டராகும்.
கலையோரம் சமதனமாக உள்ளது. பல தலைசிறந்த
துறைமுகங்கள் அதற்கு உண்டு.

போஹாய் கடல் மஞ்சள் கயல் கிழக்கு சீனக் கடல் தென் சீன கடல் தைவானுக்கு கிழக்கிலுள்ள பசிபிக் மாக்கடல் பிரதேசம் ஆகியவை சீனாவின் 5 பெரிய அண்மைக் கடல் பிரதேசங்களாகும்.

இவற்றில் போஹாய் கடல் சீனாவின் உள் கடலாகும். தைவானுக்கு கிழக்கிலுள்ள பசிபிக் மாகடல் பிரதேசம் வடக்கில் ஜப்பானின் லியூ சியூ தீவுக் கூட்டத்தின் சியென் தௌ தீவுக் கூட்டத்திலிருந்து தொடங்கி தெற்கில் பாஸ் நீரிணை வரை பரந்து கிடக்கின்றது.


சீனாவின் கடல் பரப்பின் மொத்த பரரப்பளவு 3 லட்சத்து 80 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவின் உள் நீர் பரப்பானது சீனாவின் உரிமை கடல் எல்லையின் அடிப்படை கோட்டுக்கும் பெரும் நிலத்தை நோக்கிச் செல்லும் கரையோரத்துக்கும் இடை கடல் பரப்பை குறிக்கின்றது.

சீன உரிமைக் கடல் எல்லை அதன் அடிப்படைக் கோட்டிலிருந்து தொடங்கி 12 கடல் மைல் அகலமுடையது.

சீனாவின் கடல் பரப்பில் 5000க்கும் அதிகமான தீவுகள் உண்டு.

அவற்றின் மொத்த நிலப்பரப்பு 80 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும்.
தீவுகளின் கடலோர நீளம் 14 ஆயிரம் கிலோமீட்டராகும்.
இவற்றில் மிகப் பெரிய தீவான தைவானின் நிலப்பரப்பு
36 ஆயிரம் சதூர கிலோமீட்டராகும்.

அதை அடுத்து ஹைனான் தீவின் நிலப்பரப்பு 34 ஆயிரம் சதூரக் கிலோமீட்டராகும். தைவான் தீவுக்கு வடகிழக்கு கடல் பரப்பில் அமைந்துள்ள தியௌ யூ தீவு ச்சு வெய் யு தீவு சீனாவின் கிழக்கிலுள்ள தீவுகளாகும்.

தென் சீனக் கடலில் பரந்து கிடக்கும் தீவுகள் கடற்பாறைகள் சிறு திட்டுக்கள் ஆகியவை சீனாவின் தெற்கிலுள்ள தீவு கூட்டமாகும். தெந் சீனக் கடல் தீவுகள் என்பது அதன் பெயர்.

வெவ்வேறான நில அமைப்பில் அமைந்துள்ள தீவுகள் முறையே தொன் சா தீவுகள், சிசா தீவுகள், சொங்சா தீவுகள், நான் சா தீவுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

தேசியக் கொடி, தேசிய சினை, நாட்டுப்பண், தலைநகர்

தேசியக் கொடி, தேசிய இலட்சினை, நாட்டுப்பண், தலைநகர்

தேசியக் கொடி, தேசிய சினை, நாட்டுப் பண், தலைநகர்
5 நட்சத்திரங்களுடைய செங்கொடி, சீன மக்கள் குடியரசின் தேசிய கொடியாகும்.

நீளத்துக்கும் அகலத்துக்குமிடை நிகிதாசாரம் 3:2 ஆகும். அதன் சிவப்பு நிறமானது புரட்சியைக் குறிக்கிறது. கொடியின் மேல் உள்ள 5 கோண நட்சத்திரங்கள் மஞ்சள் நிறமுடையவை. 4 சிறிய நட்சத்திரங்களின் நுனி பெரிய நட்சத்திரத்தை சூழந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சிகர மக்களின் பெரும் ஒற்றுமையை இது எடுத்துக் காட்டுகின்றது.
 
தேசிய இலட்சினை

சீன மக்கள் குடியரசின் தேசிய இலட்சினை: தேசிய கொடி, சியன் ஆன் மென் வாயிற்கோபுரம், சக்கரம், கோதுமை கதிர் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. சீன மக்கள் “மே 4”இயக்கம் முதல் நடத்தி வரும் புதிய ஜனநாயக புரட்சி போராட்டத்தையும் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையிலான தொழிளாளர் விவசாயிகள் தோழமையை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஜனநாயக சர்வாதிகார நவ சீனாவின் பிறப்பையும் இவை காட்டுகின்றன.

நாட்டுப் பண்
சீன மக்கள் குடியரசின் நாட்டுப் பண்: “தொண்டர் படையின் அணி வகுப்பு இசை” என்பது அதன் பெயராகும். அது 1935ம் ஆண்டில் இயற்றப்பட்டது. நாடக ஆசிரியர் தியென் ஹான் இந்தப் பாடலை எழுதினார். சீன புதிய இசை இயக்கத்தின் நிறுவனர் நியென் ழெ இசை அமைத்தார்.

இப்பாடல் முன்பு “கொந்தளிப்பான நிலைமையில் புதல்வ புதவிகள்”எனும் திரைப்படத்தின் தலைப்பு பாடலாகும். “செப்டம்பர் 18”நிகழ்ச்சிக்குப் பின் ஜப்பான் வடகிழக்கு சீனாவின் மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியது. சீன தேசியம் அபாயகரமான ஜீவ மரண தருணத்தில் இருந்தது.

அறிவாளர்கள் பலர் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போர் முனைக்குச் துணிவுடன் சென்றனர். இது தான் இத்திரைப் படத்தின் உள்ளடக்கமாகும்.

திரைப்படத்துடன் குறிப்பாக நாட்டைக் காப்பாற்றும் இயக்கத்தின் பரவலுடன் இப்பாடல் நாட்டின் மூலை முடுக்குகளிலும் பரவியது. சீனத் தேசிய விடுதலையின் ஊது குழலாக இது அழைக்கப்பட்டது.


1949ம் ஆண்டு செம்டம்பர் 27ம் நாள் நடைபெற்ரற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது முழு அமர்வில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதாவது சீன மக்கள் குடியரசின் நாட்டுப் பண் அதிகாரப்பூர்வமாக இயற்றப்படும் முன் “தொண்டர் படையின் அணி வகுப்பு இசை”என்ற பாடல் நாட்டுப் பண்ணாக நிர்ணயிக்கப்பட்டது.

2004ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் சீனாவின் 10வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம், “தொண்டர் படையின் அணி வகுப்பு இசை”என்ற பாடலை சீன மக்கள் குடியரசின் நாட்டுப் பண்ணாக வகுத்திருக்கின்றது.

இப்பாடல் வரிகள் வருமாறு:

“அடிமையாக வாழ மறுக்கும் மக்களே!
பொங்கி எழுவீர்!

நமது ரத்தத்தாலும் சதையாலும்
புதியதோர் நெடுஞ்சுவரைக் கட்டியெழுப்புவோம்!

மிக அபாயகரமான தருணத்தில் இன்னல்படுகின்றது நமது சீன நாடு இறுதிப்போர் முழக்கம் இடவே
நாம் அனைவரும் எழுவோம், எழுவோமே!

பகைவனின் பீரங்கிச் சூட்டையும் பொருட்படுத்தாது
நாம் அனைவரும்
ஒருமனப்பட்டு-முன்னேறுவோம்!
முன்னேறுவோம்!”


தலைநகர்:

சீன மக்கள் குடியரசின் தலைநகர்: பெய்சிங் சீன மக்கள் குடியரசின் தலைநகராகும

1949ம் ஆண்டு சப்டெம்பர் 29ம் நாள் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு சீனத் தேசிய மக்கள் பேரவையின் அதிகாரத்தைச் செயல்படுத்துவதாக அறிவித்த பின் “சீன மக்கள் அரசியல் கலந்தாய்வின் பொது செயல் திட்டத்தை”ஒருமனதாக அங்கீகரித்தது.

சீன மக்கள் குடியரசின் மத்திய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக தலைவர் மா சே துங் அக்டோபர் 1ம் நாள் தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில் அனைத்துலகிற்கும் கம்பீரமாக பிரகடனம் செய்தார்.

அப்போது முதல் நவ சீனாவின் தலைநகரான பெய்சிங் குடியரசுடன் சேர்ந்து சீன தேசத்தின் நீண்டகால வரலாற்றில் புத்தம் புதிய பக்கம் ஒன்றை திறந்து வைத்துள்ளது.

சீனாவை அறிவோம்

1: நாட்டின் நிலப்பரப்பு, மூலவளம், மக்கள் தொகை
சீனா என்பது சீன மக்கள் குடியரசின் சுருக்கமான பெயராகும்.
அது ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

அதன் நிலப்பரப்பு 96 லட்சம் சதுர கிலோமீட்டராகும்.
ஆசியாவில் அது மிகப் பெரிய நாடாகும்.
உலகில் ரஷியா கனடா ஆகிய நாடுகளை அடுத்து அது
மூன்றாவது பெரிய நாடாகும்.

சீனாவின் உரிமைப் பிரதேசமானது வடக்கில் மோஹொ
ஆற்றின் வட்க்கிலுள்ள ஹெலுங் ஆற்றின் மையத்திலிருந்து
(வட அகலக்கோட்டில் 53.30 பாகை)தெற்கில் நான்சா தீவுக்
கூட்டத்தின் தெற்கு முனையான சென்மு ஆண்சா வரை
(வட அகலக் கோட்டில் 4 பாகை)தெற்கு வடக்காக சுமார் 5500 கிலோமீட்டராகும்.

கிழக்கில் ஹெலுங் ஆறும் உசுலி ஆறும் சங்கமிக்கும்
இடத்திலிருந்து (கிழக்கு நெடுங்கோட்டில் 135.05 பாகை)
மேற்கில் பாமிர் பீடமூமி வரை (கிழக்கு நெடுங்கோட்டில்
73.4 பாகை)கிழக்கு மேற்காக சுமார் 5000 கிலோமீட்டராகும்.


சீன எல்லையின் நீளம் சுமார் 22 ஆயிரத்து 800 கிலோமீட்டராகும்.
அதன் கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும்
உள்ளன.

வடகிழக்கில் ரஷியா, வட மேற்கில் கசாக்கிஸ்தான், கீர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,
இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் மியன்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளன.

கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.

ஒலிபரப்பு நேரம்

இந்திய நேரம் இரவு 7:30-8:30

பெய்சிங் நேரம் இரவு 22:00-23:00

சிற்றலை 31.04 மீட்டர்----9665 கி.உறர்ட்ஸ்
25.67 மீட்டர்----11685 கி.உறர்ட்ஸ்


இந்திய நேரம் இரவு 8:30-9:30

பெய்சிங் நேரம் இரவு 23:00-24:00

சிற்றலை 25.42 மீட்டர்-11800 கி.உறர்ட்ஸ்
36.31 மீட்டர்-9490 கி.உறர்ட்ஸ்


இந்திய நேரம் காலை 7:30-8:30


பெய்சிங் நேரம் காலை 10:00-11:00

சிற்றலை 25.27 மீட்டர்----11870 கி.ஹர்ட்ஸ்
21.87 மீட்டர்----13715 கி.ஹர்ட்ஸ்
22.04 மீட்டர்----13610 கி.ஹர்ட்ஸ்


இந்திய நேரம் காலை 8:30-9:30

பெய்சிங் நேரம் காலை 11:00-12:00

சிற்றலை 22.06 மீட்டர்----13600 கி.ஹர்ட்ஸ்
21.84 மீட்டர்----13735 கி.ஹர்ட்ஸ்

<>நிகழ்ச்சி நிரல்<>

திங்கள்:செய்திகள், செய்தித்தொகுப்பு, மக்கள் சீனம், சீன சமூக வாழ்வு, சீன மகளிர், சீன உணவு அரங்கம், தமிழ் மூலம் சீனம்


செவ்வாய்:செய்திகள், செய்தித்தொகுப்பு, சீனப் பண்பாடு, சீனக் கதை, மலர்ச் சோலை, தமிழ் மூலம் சீனம்

புதன்:செய்திகள், செய்தித்தொகுப்பு, கேள்வியும் பதிலும், நேயர் நேரம், நேருக்கு நேர், தமிழ் மூலம் சீனம்

வியாழன்:செய்திகள், செய்தித்தொகுப்பு, அறிவியல் உலகம், நலவாழ்வுப் பாதுகாப்பு, சீனாவில் இன்ப பயணம், தமிழ் மூலம் சீனம்

வெள்ளி:செய்திகள், செய்தித்தொகுப்பு, உங்கள் குரல், நட்பு பாலம், சீனாவுக்கு அப்பால்

சனி:சீனத் தேசிய இனக் குடும்பம், நேயர் கடிதம், இசை நிகழ்ச்சி, தமிழ் மூலம் சீனம்

ஞாயிறு:விளையாட்டுச் செய்திகள், நேயர் விருப்பம்

<>சீன தமிழ் வானொலி-அமெரிக்க நேயர் மன்றம்<>






அமெரிக்காவில் சீன தமிழ் வானொலியின்
நேயர் மன்றம் அமைக்கப்பட்டது.

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாநிலத்தில்
வாக்கசா நகரில் துவங்கப்பட்ட
இந் நேயர் மன்றம் 25
உறுப்பினர்களைக் கொண்டது.

இதன் நிர்வாகிகள் ஒருமனதாக
15-05-06 தேர்வு செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை
மாலை நாலு மணிக்குநேயர் மன்றம் கூடுவது என்று
முதல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நேயர் மன்ற நிர்வாகிகள்:-

தலைவர் - ஆல்பர்ட் ·பெர்னாண்டோ

செயலாளர் - நிகில்

பொருளாளர் - நவீன்

செயற்குழு உறுப்பினர்களாக

வைத்திய நாதன், அப்துல் அக்கீம்,
சேசுராஜ், சிதம்பரநாதன் மற்றும்கவிதா அவர்களும்
ஒருமனதாகதெரிவு செய்யப்பட்டனர்.

நேயர் மன்றத்திற்கு ஒரு வலைப்பதிவு ஒன்றை ஏற்படுத்துவது
என்றும் அதில் மன்ற நடவடிக்கைகளை பதிவு செய்து உலக
நேயர்கள் மன்றங்கள் பார்க்கும்வகையில் ஆவன செய்வதும்,

சீனத் தமிழ்வானொலியின் சிறப்புக்களைப் பதிவுசெய்வது என்றும்
நேயர் மன்றத்தின் அங்கீகரம் பெற சீனவானொலி தமிழ் பிரிவுக்கு
விண்ணப்பிப்பதுஎன்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தேனீர் விருந்துக்குப் பின் செயலரின்நன்றி நவிலலுக்குப் பின் கூட்டம்இனிதே நிறைவடைந்தது.