Monday, May 29, 2006
சீன-இந்திய அமைச்சர்கள் சந்திப்பு
<>சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு<>
இந்தியாவுடனான நட்புப்பூர்வமான அண்டை நாட்டு
ஒத்துழைப்புறவை வளர்ச்சியுறச் செய்வதில் சீனா
மிகவும் கவனம் செலுத்துகின்றது,
இரு நாடுகளின் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி
உறவை முழுமையாகவும் ஆழமாகவும் வளர்க்க சீனா
விரும்புகின்றது என்று சீன வெளியுறவு அமைச்சர்
லீ சௌ சிங் கூறியுள்ளார்.
இன்று பெய்சிங்கில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
பிரணாப் முகர்ஜிஐச் சந்தித்துரையாடிய போது அவர்
இவ்வாறு கூறினார்.
சீனாவும் இந்தியாவும் நீண்ட வரலாற்று நாகரீகமுடைய
நாடுகளாகும். இரு நாடுகளின் மொத்த மக்கள் தொகை,
உலக மக்கள் தொகையில் சுமார் 30 விழுக்காடு வகிக்கின்றது.
இருநாடுகளும் வளர்ந்து செல்வமடைந்தால், மனிதகுலத்துக்கு
மாபெரும் பங்காற்றும் என்றார் லீ சௌ சிங். இந்தியாவும்
சீனாவும் நல்ல நண்பர்கள்.
பல பிரச்சினைகளில் இரு நாடுகள் ஒத்த அல்லது நெருங்கிய கருத்துக்களைக் கொண்டுள்ளன. இந்தியாவும் சீனாவும்
ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சர்வதேச விவகாரங்களில்
ஆக்கப்பூர்வமாக பங்கு கொள்வது என்பது, உலக சமாதானத்தைப் பேணிக்காத்தல், உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
சீனத் தரப்புடன் கூட்டு முயற்சி மேற்கொண்டு, இரு நாடுகளின் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் அதிகரித்து, இரு தரப்புறவின் வளர்ச்சியை மேலும் தூண்ட இந்தியா விரும்புகின்றது என்றும் அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment