<>நேயர் விருப்பம்-13-06-06 <>
13ம்தேதிய சீனவானொலியின் தமிழ் நிகழ்ச்சியை
இன்று அமெரிக்க நேயர்கள் ஒரே இடத்தில் கூடி கேட்டோம்.
ஒரு மணி நேர நிகழ்ச்சியையும் கேட்டோம். 12ம்தேதி ஒலிபரப்பை
நேயர்கள் அவரவர் இல்லங்களிலிருந்தே கேட்டனர்.
எல்லோரும் கூடி ஓரிடத்தில் சீன தமிழ் வானொலி ஒலிபரப்பைக் கேட்க விழைந்தது "நானும் சீன வானொலி நிலையமும் என்ற பொது அறிவுப் போட்டிக்குரிய செய்தி தொகுப்பைகேட்டு போட்டியில் பங்கு பெறுவதே
இதன் நோக்கம்!
வழக்கம்போல திரு.ராஜாராம் அவர்களின் கணீர் குரல் மற்றும்
கலைமகள் அவர்களின் தமிழ் செய்தி அறிக்கையைகேட்டோம்.
பயனுள்ள பல தகவல்களை அறிந்துகொண்டோம்.
தொடர்ந்து மலர்விழி அவர்களின் ஷாங்காய் நகரபொருள்காட்சி கட்டுமான செய்தியின் விரிவானசெய்தியினைக் கேட்டு மகிழ்ந்தோம்.
தொடர்ந்து தி.கலையரசி அவர்களின் சமீபத்திய அமெரிக்க அதிபரின் ஈராக் விஜயம் குறித்துவிரிவான செய்தித் தொகுப்பையும் கேட்டு மகிழ்ந்தோம்.
தொடர்ந்து திரு.ராஜாராம் அவர்களின் அறிவிப்போடு நானும் சீன வானொலி நிலையமும் பொது அறிவுப்போட்டிக்கான 2வது கட்டுரையை கலையரசி அவர்களின் குரலில் கேட்டோம்.
தொடர்ந்து திரு.ராஜாராம் அவர்களின் சீன கலைநிகழ்ச்சி குறித்த சோப்புக் கதையை விவரித்ததையும் கேட்டு மகிழ்ந்தோம்.
நேயர் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாசிக்கக் கேட்டபின் செவிக்கினியபாடல்களை ஒலிபரப்பியதையும் கேட்டு மகிழ்ந்தோம்
14ம்தேதி நிகழ்ச்சியை அவரவர் இல்லங்களிலிருந்தே கேட்டு
"நானும் சீன வானொலி நிலையமும்" எனும் பொது அறிவுப்
போட்டிக்கான எட்டு வினாக்களுக்குரிய விடைகளையும் பூர்த்தி
செய்து தலைவர் திரு ஆல்பர்ட் அவர்களிடம் கொடுத்து அனுப்புவது
என்று தீர்மானித்தோம்.
தேனீர் விருந்துக்குப் பின் அனைவரும் விடைபெற்றனர்.
Wednesday, June 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment