Thursday, February 08, 2007

வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம்-(4)

<0>பொது அறிவுப்போட்டி<0>
நான்காவ‌து க‌ட்டுரை
சுச்சுவான் மாநிலத்தில் வாழும் விலங்குகளின் பிரதிநிதியான பாண்டா பற்றி கூறுகின்றோம். செங்து நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், அதாவது பாண்டாவின் வீட்டுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம்.


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், பாண்டாக்கள் மிகவும் விரும்பும் உணவுகளில் ஒன்றான, மிக அதிக நிலப்பரப்பில் வளரும் ஜியன்சு எனும் ஒரு வகை மூங்கில் இனம் அழிந்துவிட்டது, பாண்டாக்களின் எதிர்கால வாழ்வுக்காக, இந்த மூங்கில்களை மீண்டும் வளர்ப்பதற்காக பணம் திரட்டும் வகையில், சீன இசையமைப்பாளர்கள் முன்பு நீங்கள் கேட்ட இந்த பாடலை இயற்றினர். இப்பொழுது, வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் இந்த வகை மூங்கில் செழிப்புடன் வளர்கின்றது. இயற்கையில் மிகவும் பழமை வாய்ந்த மிக அரிதான விலங்கான பாண்டாக்கள் மிகவும் இன்பமாகவும் எந்த கவலையின்றியும் வாழ்கின்றன.


சுச்சுவான் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், பாண்டாக்கள் முக்கியமாக வாழும் இடங்களில் ஒன்றாகும். எனவே, சுச்சுவான் மாநிலம், பாண்டாக்களின் ஊர் என கருதப்படுகின்றது. சுச்சுவான், ஷென்சி மாநிலங்களிலும் கான்சு மாநிலத்தின் ஒரு பகுதியிலும் உள்ள மலைப் பிரதேசங்களில் தான் காட்டு பாண்டாக்களை மக்கள் காண முடியும். எனவே, சீன மற்றும் வெளிநாட்டு பயணிகள், பாண்டாக்களை நேராக பார்க்க வேண்டுமானால், அவர்கள் இயற்கை பாதுகாப்பு மண்டலத்திலுள்ள சீனப் பாண்டாத் தோட்டத்துக்கு வர வேண்டும். இந்த மண்டலத்தின் பொறுப்பாளர் சாங் லி மிங் கூறியதாவது-

பாண்டாக்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவி செய்து, உலகில் பாண்டாவை விரும்புவோருக்கு, பாண்டாவை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதும், உயிரின வாழ்க்கை சூழலை பாதுகாப்பது ஏன் என்பதை பயணிகளுக்கு தெரிவிப்பதும் எங்கள் நோக்கமாகும் என்றார்.
நீண்டகாலமாக, பாண்டாவின் உருண்டையான உடல், மென்மையும் வேடிக்கையுமான செயல்பாடு, வெள்ளையும் கருப்பும் கலந்த தோற்றம் ஆகியவை மக்களை மிகுதியும் கவர்ந்து வருகின்றன. சீனத் தேசிய பாண்டா தோட்டத்தில் 100க்கும் அதிகமான பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பல பாண்டாக்கள் வெளியே விளையாடுகின்றன, அவற்றில் சில, சலுக்கல் ஏணியில் விளையாடுகின்றன. சில, சூரிய ஒளியில் பாறையின்மீது சார்ந்திருக்கின்றன. வேறு சில, மரங்களில் ஏறி, கஷ்டமான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன

அமெரிக்காவிலிருந்து வந்த Rebecca Haase அம்மையார், பாண்டாக்கள் சாப்பிடுவது, நீர் குடிப்பது, மற்றும் விளையாடுவதை பார்த்ததும் படம் பிடித்தார். அவர் பாண்டாவை முதல் முறை நேரடியாக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். அவர் கூறியதாவது :-


நான் இங்கு வந்து பாண்டாக்களை நேராக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவை பார்த்தால் மிகவும் ஆரோக்கியமாகவும் பிரியமுள்ளதாகவும் இருக்கின்றன. வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் மேலும் கூடுதலான பாண்டாக்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
சீனப் பாண்டாத் தோட்டத்தில் முன்னேறிய சாதனங்களுடன் கூடிய ஒரு குட்டி வளர்ப்பு அறை உண்டு, இதில் குட்டி பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. சீன தைவானிலிருந்து வந்த திரு சாங் சி சாங் அவர்கள் இந்த அறையை அதிக நேரம் பார்த்தார். பணியாளர்கள் குட்டி பாண்டாக்களுக்கு பாலை ஊட்டிய முழு போக்கையும் அவர் பார்வையிட்டார். அவர் கூறியதாவது:-


சீனத் தேசிய பொக்கிஷமான பாண்டாக்கள் பற்றி இந்த முறை அதிகம் அறிந்துகொண்டேன், பாண்டா
பற்றிய கதை, வளரும் சூழ்நிலை ஆகியவற்றை வழிகாட்டி ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். பண்டாக்கள் இனப்பெருக்குவது மிகவும் கஷ்டம், தாய் பாண்டாவுக்கு தன் குட்டியை வளர்க்கவும்
தெரியாது என்றார் அவர்.

பாண்டாக்கள் மிகவும் பிரியமுள்ளவை. மேன்மேலும் கூடுதலான பயணிகள் சில நேரங்களை செலவழித்து வொலுங்கிற்கு வந்து தொண்டர்களாக பணிபுரிய விரும்புகிறார்கள். வளர்ப்பாளரின் ஆடையை அணிந்த ஜப்பானியர் Kodama Midori அவர்களில் ஒருவராவார். தம்முடன் சேர்ந்து மொத்தம் மூன்று பேர் வந்துள்ளதாகவும், பாண்டாக்களுடன் ஒரு வாரம் கழிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நான் நாள்தோறும் காலையில் பாண்டாவுக்கு உணவு ஊட்டுகின்றேன், மதியமும் இரவிலும் அறையை சுத்தம் செய்து, கழிவுகளை அகற்றுகின்றேன். சாதாரண நாட்களில் பாண்டாகள் கிட்ட இருப்பது சாத்தியமாகாது. எனவே, இந்த முறை நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார் அவர்.

உண்மையில் வொலுங்கில் வேறுபட்ட பருவங்களில், பாண்டாக்களின் வேறுபட்ட வளர்ப்பு கட்டத்தை கண்டறியலாம். கோடைக்காலத்தில் வொலுங்கில் குளிர்ச்சியாக இருக்கிறது. இக்காலகட்டம் பாண்டாக்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் காலமாகும். இலையுதிர் காலத்தில், பாண்டாக்கள் குட்டிகளை பிரசவிக்கும் முழு போக்கையும் பயணிகள் பார்க்கலாம். வசந்த காலத்தில் பாண்டா இனபெருக்கம் செய்யும் காலகட்டமாகும். இதில் பல காதல் காட்சிகள் உண்டு.

வளர்ப்பு பாண்டாக்கள் தவிர, தற்போது, வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தின் காடுகளில், 100க்கும் அதிமான காட்டு பாண்டாக்கள் வளர்கின்றன. உலகில் உள்ள பாண்டாக்களின் மொத்த எண்ணிக்கையில் இது பத்தில் ஒரு பகுதியாகும். உயர் நிலை பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில், அண்மையில் இந்த இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் பாண்டாக்களின் வாழ்க்கை பற்றிய உலகின் முதலாவது ஆராய்ச்சி நடவடிக்கை துவங்கியுள்ளது. அவர்கள் அறிவியல் திறனுடைய கண்காணிப்பு கருவிகள் மூலம் காட்டிலுள்ள பாண்டாக்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கலாம்.
அடுத்து, இரண்டு வினாக்கள்-



1.) பாண்டாவின் ஊர், சுச்சுவான் மாநிலத்தில் உள்ளதா?
2.) வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் எத்தனை காட்டு பாண்டாக்கள் உள்ளன?

சிங்செங் மலையும் துச்சியாங் அணைக்கட்டும்(3)

<0> மூன்றாவது க‌ட்டுரை<0>


சீன வானொலி நிலையமும் சீன ஸ்சுவான் மாநிலத்து சுற்றுலாப் பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்யும் பாண்டாக்களின் பிறந்தகம்-சீன ஸ்சுவான் மாநிலம் என்பது பற்றிய சுற்றுலா அறிவுப் போட்டிக்கான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தவறாமல் கேட்டுவருவதை வரவேற்கின்றோம். இன்று நாங்கள் ஸ்சுவான் மாநிலத்தின் தலைநகரான சங்து நகருக்கு அருகிலுள்ள உலக பண்பாட்டு மரபுச்செல்வமான சிங்செங் மலைக்கும் துச்சியாங் அணைக்கட்டுக்கும் சென்று பார்க்கலாம். ஸ்சுவான் மாநிலத்தின் தலைநகரான சங்துவின் வட மேற்கு பகுதியிலிருந்து புறப்பட்டுக் காரில் சுமார் ஒரு மணி நேரம் பயணித்தால், சிங்செங் மலையைச் சென்றடையலாம்.
சிங்செங் மலை, சீனாவின் தாவ் மதம் பிறந்த இடங்களில் ஒன்றாகும்.


மனிதரும் இயற்கையும் இணக்கமாக இருப்பது என்பது தாவ் மதத்தின் கருத்து. சுமார் 1800ஆம் ஆண்டுகளுக்கு முன்னர், தாவ் மதத்தைத் துவக்கிவைத்த சாங்லின் என்பவர், இந்தப் பசுமையான சிங்செங் மலையின் அழகையும் அமைதியையும் விரும்பியதால், இவ்விடத்தில் தாவ் மதச் சித்தாந்தத்தை உருவாக்கினார் என்று மக்கள் ஊகித்துபார்க்கின்றனர்.
தாவ் மதம் துவக்கிவைக்கப்பட்ட பின்னர், அது நீண்ட காலம் சீனாவிலும் கிழக்காசியாவிலும் பெரும் செல்வாக்கு வாய்ந்த மதமாக இருந்துவந்தது. தற்போது சிங்செங் மலையில் உள்ள சுமார் நூறு தாவ் மதத்தவர்கள், மத விதிகளின் படி கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையை நடத்திவருகின்றனர். ஆனால், தாவ் மதத்தின் துவக்கக் காலத்திலே நிலைமை அப்படி இருக்கவில்லை என்று வழிகாட்டி காங்யு கூறினார். அவர் கூறியதாவது, அப்போது, தாவ் மதத்தவர்கள் தத்தமது வீடுகளில் தாவ் மதச் சித்தாந்தத்தைக் கற்றுக்கொண்டு தங்களது செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதனை கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் செய்து குழந்தை பெறவும், மது குடிக்கவும் இறைச்சி வகைகளை உண்ணவும் அனுமதிக்கப்பட்டனர். தர்மம் செய்வதில் அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால் தற்போதைய நிலைமை அதிலிருந்து வேறுபடுகின்றது.
சிங்செங் மலையில் தங்கியிருக்கும் தாவ் மதத்தவர்கள் தத்தமது குடும்பத்தினர்களை விட்டுவிலகிய பின்னர், தாவ் மத ஆசிரியர்களிடமிருந்து தாவ் மதச் சிந்தனையைக் கற்றுக்கொண்டு, தாவ் மத நெறிக்கிணங்க தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். மது குடிக்கவோ, இறைச்சி வகைகளை உண்ணவோ, திருமணம் செய்து குழந்தை பெறவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர். இதுவரை சிங்செங் மலையில் பத்துக்கு மேலான தாவ் மதக் கோயில்களும் ஏராளமான தொல்பொருட்களின் சிதிலங்களும் செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன. எளிமை, இயற்கை ஆகியவற்றுக்குத் தாவ் மதத்தவர்கள் மதிப்பு அளிப்பதால், இம்மலையிலுள்ள தாவ் மதக் கோயில்களிலும் கூடாரங்களிலும் பெரும்பாலானவை, அடர்ந்த மரங்களுக்கிடையில் அமைந்து, சுற்றுப்புறத்தில் உள்ள மலைகள், மரங்கள், கற்பாறைகள் மற்றும் நீருற்றுகளுடன் இணைந்து எழில் மிக்க இயற்கைக் காட்சியாக உள்ளன. இந்தக் கோயில்களில் சிங்செங் மலையின் உச்சிக்கு அருகில் அமைந்துள்ள சாங்சிங்குங் கோயிலில் வழிபாடு செய்ய, தாவ் மத நம்பிக்கையுடையவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இக்கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள தாவ் மதத்தைத் துவக்கிவைத்தவரான லாவுசியின் உருவச் சிலை குறிப்பிடத் தக்கது. சிங்செங் மலையின் அமைதியையும் தாவ் மதப் பண்பாட்டின் வளத்தையும் உணர்ந்துகொண்ட பின்னர், இந்தச் சுற்றுலா நெறியில் அமைந்துள்ள பார்வையிடுவதற்குரிய மற்றொரு காட்சித் தலத்தை உங்களோடு சேர்ந்து கண்டுகளிக்கிறோம். சிங்செங் மலைக்கு அருகில் அமைந்துள்ள துச்சியாங் அணைக்கட்டு இது. உலகில் இதுவரை மிக நீண்ட வரலாறுடைய நீர் சேமிப்புத் திட்டப்பணியும் இதுவாகும்.
மின்சியாங் ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள துச்சியாங் அணைக்கட்டு, சுமார் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள அதிகாரி லீபின் என்பவரின் தலைமையில் கட்டியமைக்கப்பட்டது. உலகில் தொன்மை வாய்ந்த புகழ்பெற்ற நீர் சேமிப்புத் திட்டப்பணிகளில், பண்டைக் கால Babylon மன்னராட்சி மற்றும் பண்டைகால ரோம் நாட்டில் செயற்கை முறையில் தோண்டியெடுக்கப்பட்ட கால்வாய்கள், வெகு காலத்திற்கு முன்பே பாழாகிவிட்டன. சீனாவின் துச்சியாங் அணைக்கட்டு மட்டுமே இதுவரையிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்த அணைக்கட்டுக் கட்டப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த காலத்திலும் கோடைக்காலத்திலும் வெள்ளம் ஏற்பட்ட போதெல்லாம், ஆற்று நீர் பாய்ந்து ஓடியதால் வெள்ளப்பெருக்கு அடிக்கடி நிகழ்ந்தது. ஆனால், துச்சியாங் அணைக்கட்டின் வடிவமைப்பின் படி, மின்சியாங் ஆறு 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதால், வெள்ள நீரை வெளியேற்றுவதோடு, வயலுக்கு நீர்ப்பாசனம் செய்யவும் முடியும். அதாவது மின்சியாங் ஆறு, உட்புற ஆறாகவும் வெளிப்புற ஆறாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துக்கு உட்புற ஆறும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு வெளிப்புற ஆறும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கப் பயணி Ken Boyd, துச்சியாங் ஆற்றின் நுட்பமான வடிவமைப்பினாலும் பண்டைக் காலச் சீன மக்களின் விவேகத்தினாலும் வியப்படைந்தார். அவர் கூறியதாவது, துச்சியாங் அணைக்கட்டு சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதை அறிந்து வியப்படைகின்றேன். நீரோட்டத்தை இந்த அணைக்கட்டு கட்டுப்படுத்தியதால், வறட்சிக்காலத்தில் நீர்ப்பாசனம் செய்வதற்குப் போதிய அளவு நீர் உள்ளது. இதன் விளைவாக விவசாயிகள் பயன் பெறலாம். மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படலாம் என்றார் அவர். துச்சியாங் அணைக்கட்டு இருப்பதன் காரணமாக, இன்றைய சீனாவின் ஸ்சுவான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான எழில் மிக்க இயற்கைக் காட்சிகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சித் தலங்களும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்து இக்கட்டுரையுடன் தொடர்புடைய 2 வினாக்களை வழங்குகிறோம். .
1) சிங்சங் மலை, சீனாவின் தாவ் மதம் பிறந்த இடங்களில் ஒன்றா?
2) துச்சியாங் அணைக்கட்டு, உலகில் இதுவரை மிக நீண்ட வரலாறுடைய நீர் சேமிப்புத் திட்டப்பணியாகும். அது கட்டியமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகளாகின்றன?

ஓமெய் மலை மற்றும் லெசான் மலை(2)

<0>பொது அறிவுப்போட்டி<0>
(இரண்டாம் க‌ட்டுரை)

ஓமெய் மலை


மற்றும்

லெசான் மலை

ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்று நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருகிறது. கி.பி.4ம் நூற்றாண்டிலேயே இந்திய துறவி பெள சாங், இம்மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின், இம்மலையை சூரியன் உதயமாகும் இடத்தில் முதலாவது மலை என்று வியந்து பாராட்டினார். பண்டைக்கால இந்தியா, சீனாவை சூரியன் உதயமாகும் இடமென புகழ்ந்து போற்றியது. அதன் பின்னர், ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்ற புகழை பெற்றது.

ஓ மெய் மலையின் தனிச்சிறப்பு வாய்ந்த கம்பீரமான தோற்றம், அதன் நீண்டகால வரலாறுடைய புத்த மத பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. கி.பி.ஓன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் புத்த மதம், ஓ மெய் மலையில் பரவியது. அத்துடன் இங்கு சீனாவின் முதலாவது புத்த மதக்கோயில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறங்களில் இதர கோயில்கள் அமைக்கப்பட்ட பின், ஓ மெய் மலை, சீன புத்த மதத்தின் புனித இடங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இங்கு ஊதுவத்தியின் மணம் பரவியுள்ளது.

இம்மலையில் SAMANTABHADRA புத்தரை மக்கள் வழிபாடு செய்கின்றனர். அவர், உலகில் பல புத்தர்களின் மூத்த மகனாவார். புத்த மதம் இருக்கும் இடமெங்கும் அவர் காணப்படுகிறார். தற்போது ஓ மெய் மலையில் மொத்தம் 300க்கும் அதிகமான துறவிகளும் பிக்குகளும் இருக்கின்றனர். சுமார் 30 கோயில்கள் இங்கு காணப்படுகின்றன.

மலை உச்சியில் அமைந்துள்ள ஜின் திங் என்னும் இடம், ஓ மெய் மலையின் முக்கிய இடமாகும். இங்கு பளப்பளக்கும் மூன்று தங்க நிற மண்டபங்களுடன் 48 மீட்டர் உயரமுள்ள SAMANTABHADRA தங்க புத்தர் சிலை, மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வழிக்காட்டி யாங் தேள அம்மையார் கூறியதாவது:

இந்த SAMANTABHADRA புத்தர் கையில் தங்க ரூ யீ உடன், குறிப்பு, ரூ யீ என்பது, மங்கலத்தைக்காட்டும் ஒரு வகை ஜெட்கபொருளாகும். தலையில் பொன் மணி முடியை அணிந்துள்ளார். இந்தக் கம்பீரமான தோற்றத்தின் கீழ், அவர் சுவாரி செய்யும் 6 தந்தம் கொண்ட வெள்ளை யானை காணப்படுகிறது. புத்தர் சிலை, மண் உலகில் உள்ள இன்பம் கோபம், துயரம், மகிழ்ச்சி ஆகிய 4 வகை உணர்வுகளை காட்டுகிறது. மக்கள், எந்தத் திசையில் இருந்தாலும் அவருடை நேர் முகத்தை பார்க்க முடியும். இந்தப் புத்தரோ மக்களை நோக்கி பார்த்த வண்ணம் அனைவருக்கும் இன்பம் தருவார். அனைவருக்கும் புகலிடம் தருவார் என்றார்.


புத்த மதம் ஓ மெய் மலையில் பரவி வரும் போக்கில், இம்மலையின் பண்பாடும் வளம் பெற்றுள்ளது. குறிப்பாக இங்குள்ள பல கோயில்களும் புத்த சிலைகளும் ஓ மெய் மலையின் எழில் மிக்க இயற்கைக் காட்சியுடன் இணைந்திருக்கும் தலைசிறந்த பண்பாடாக உருவாயின. இதைக் கருத்தில் கொண்டு தான், யுனெஸ்கோ, ஓ மெய் மலையை உலக இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாக சேர்த்துள்ளது.ஓ மெய் மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின் இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லெ சான் பெரும் புத்தர் சிலையைக் கண்டுகளிக்கலாம். இந்தச் சிலை, உலகில் மிக பெரிய புத்த சிலையாகும். இதிலிருந்து புத்த மதத்தின் மீதான அப்போதைய மத நம்பிக்கையாளர்களின் புக்தியை கண்டறிந்து வியப்படைவீர்கள். வழிக்காட்டி வூ லீ பிங் அம்மையார் கூறியதாவது:




இந்த லெ சான் புத்தர் சிலை ஏறக்குறைய கி.பி.7ம் நூற்றாண்டில், அதாவது சீனாவின் தாங் வம்சக்காலத்தில் அமைக்கப்பட்டது. துவக்கத்திலேயே இங்கு புனிதப் பயணம் மேற்கொண்ட ஹேதொங் என்னும் முனிவர், இவ்விடம் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாதலால், இங்கு படகுகள் மூழ்கி உயிரிழப்புச் சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டதைக் கண்டறிந்தார். பின், லெசான் பெரிய புத்தர் சிலையைக் கட்டியமைப்பதன் மூலம் வெள்ளப்பெருக்கை வென்றடக்குவதென முடிவு செய்தார். ஆதலால், நன்கொடைக்காக, அவர் நாடெங்கும் சென்றார். லெசான் திரும்பிய போது, ஊழல் மிகுந்த அதிகாரி ஒருவரால் கைப்பற்றப்பட்டார். பேராத்திரம் அமைந்த அவர், என் கண்களைப் பிடுங்கலாம், ஆனால், இந்தச் சொத்து உனக்கு கிடைக்கவே கிடைக்காது என்று சொல்லி, தமது கண்களைப் பிடுங்கினார். இதைக் கண்ட அந்த அதிகாரி பயந்தோடி விட்டார். இந்தச் சிலையின் தலை கட்டிமுடிக்கப்பட்டதும் துறவி ஹேதொங், தேவலோகத்துக்குச் சென்றார் என்று அவர் கூறினார்.

பின்னர் இரண்டு தலைமுறையினரின் முயற்சிகளுக்குப் பின், அதாவது ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்குப் பின், லெசான் புத்தர் சிலை கட்டிமுடிக்கப்பட்டது. இன்று நாங்கள் தூரத்திலிருந்து இந்த புத்தர் சிலையைப் பார்க்கும் போது, துறவி ஹேதொங்கின் தியாக எழுச்சியையும் மலையைத் தோண்டி புத்தர் சிலையை உருவாக்கும் வீரசாகசத்தையும் வியந்து போற்றுகிறோம். எனவே, பல புத்தமத நம்பிக்கையாளர்கள், இங்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு சீனாவின் சிங்ஹேய் மாநிலத்தின் தொங்நாராச்சிங் கோயிலைச் சேர்ந்த உயிருள்ள புத்தர் NORBU RINPOCHE இவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது:
புத்த மத நம்பிக்கையாளர்களாகிய எங்களைப் பொறுத்த வரையில், இங்கு வந்து நீண்டகால வரலாறு வாய்ந்த கம்பீரமான மாபெரும் புத்தர் சிலையை மரியாதையுடன் வணங்க முடிந்தமை, எனக்கு மன அமைதியை தந்தது என்றார் அவர்.இனி, இந்தக் கட்டுரையிலுள்ள இரண்டு வினாக்கள்:
1. ஓ மெய் மலை, சீனாவின் புனித புத்த மத இடங்களில் ஒன்றாக விளங்குகிறதா?
2. லெசான் பெரிய புத்தர் சிலை, உலகில் மிக பெரிய புத்தர் சிலை. அதன் உயரம் எவ்வளவு?
இக்கட்டுரையைக் கேட்ட பின், அவற்றுக்கான விடைகளை நீங்கள் இதுவரை சீனாவின் ராட்சத பாண்டாவின் ஊரான சிசுவான் மாநிலத்தில் இன்பப் பயணம் பற்றிய பொது அறிவிப்போட்டிக்கான இரண்டாவது கட்டுரையைக் கேட்டீர்கள். நாளை, அதன் மூன்றாவது கட்டுரையைக் கேட்கலாம்.

<>பூமியில் சொர்க்கம்<>(1)

"ராட்சத பாண்டாவின்

ஊரான ஸ்ச்சுவான் மாநிலத்தில்

இன்பப் பயணம்"

<0>பொது அறிவுப்போட்டி<0>


Jiu zhai gou சீனாவின் ஸ்சுவான்
மாநிலத்தின் மேற்கு பகுதியின் abaஇல் திபெத்தின qiang இன தன்னாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் 40 கிலோமீட்டருக்கு மேலான பள்ளத்தாக்குப் பரப்பில், 9 திபெத் இன கிராமங்கள் சிதறிக் கிடத்தின்றன. இஸ்ரேலிருந்து வந்த திரு Nerohem Yam, சீனாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்ய விரும்புகின்றார். Jiu zhai gou பற்றி அவர் கூறியதாவது,இவ்விடம், சீனாவில் மிகுதியும் எழிலானது. இதர இடங்களில் இது போன்ற மலைகளையும் ஏரிகளையும் நான் பார்த்ததில்லை.


இவை, இதர அமைத்துக்கும் மேலானது என்றார்.நீரினால், Jiu zhai gou அற்புதமானதாக உள்ளது. நீர் என்பது, அதன் ஆத்மா. இவ்விடத்தின் பள்ளத்தாக்குகளில், 100க்கும் அதிகமான சிறிய பெரிய வண்ண உயர் மலைகளும், ஏரிகளும் இங்கும் அங்குமாக காணப்படுகின்றன. உள்ளூர் திபெத் இன மக்கள், இதை ஹைசி என அழைக்கின்றனர். அதாவது, கடலின் மகன் என இது பொருட்படுகின்றது.Jiu zhai gouவில், சான்காய் என்னும் மிகப் பெரிய ஏரி, அருகில் பார்ப்பதற்கு நீர் பசுமையானது. ஏரியின் அடித்தளம் வரை நீர் தெளிந்து ஓடுகின்றது. தூரத்தில் பார்க்கும் போது, ஏரிப் பரப்பு, நீளமானது.


அலையில்லாமல் அமைதியானது.


இரு கரைகளில் பசுமையான மலைகள் தலைகீழாக இந்த ஏரியில் கிடக்கின்றன. ஓவியம் போல் அவை எழிலானவை. ஜப்பானைச் சேர்ந்த Morishita Sadamasa, இத்தகைய ஏரியைக் கண்டு ரசித்த பின், வாயார பாராட்டினார்.

அவர் கூறியதாவது,ஜப்பானில் Jiu zhai gou பற்றிய தொலைக்காட்சி படத்தைப் பார்த்துள்ளேன். இங்கு வந்து, அதன் உண்மை காட்சியைப் பார்த்த பின்னர், தொலைக்காட்சியிலுள்ளவற்றை விட இது மேலும் அழகானது. இத்தகைய ஏரிகள், ஜப்பானிலும் இருக்கின்றன. ஆனால், Jiu zhai gou அவற்றை விட அழகு என்றார்.Jiu zhai gouவிலுள்ள நீர், ஏரிகளில் இருக்கும் போது அதிகமாக அமைதியாகவுள்ளது. ஆனால், மரங்கள் நிறைய வளர்ந்துள்ள மலையிலிருந்து செங்குத்தாக வீழ்ந்த போது, நீர் ஆர்ப்பரிக்கும் அருவியாக மாறிவிடும். Jiu zhai gouவில் 17 நீர் அருவிகள் உள்ளன. பார்ப்பதற்கு, நீர்மட்டத்தின் ஆழம் அதிகமல்ல. ஆனால், அகலமான நீர் திரை, பாளை முழுவதிலும் தொங்கவிடப்படுவது போல் காட்சியளிக்கின்றது. அவற்றில் நோழ்லான் எனும் நீர் அருவி, சீனாவில் மிக அகலமான நீர் அருவி என்று புகழ்பெற்றுள்ளது. நீர் ஓட்டம், நூறு மீட்டர் அகலமுடைய மலைச்சரிவின் விளம்பில் கீழே நோக்கி ஓடுகின்றது. இது, நீர்த் திரையாகக் காட்சி அளிக்கின்றது.


சூரிய ஒளியில் இது, வானவில் போல் மாயக் காட்சி அளிக்கின்றது. மிக அற்பதமானது. இது தான், Jiu zhai gou. பூமியில் சொர்க்கம் என சீனர் அணைக்கின்றனர். Jiu zhai gou 1992ஆம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக இயற்கை மரபுச் செல்வப்பட்டியலில் சோர்க்கப்பட்டது.



இங்கு வசிக்கும் திபெத் இன மக்களின் கருத்தில், Jiu zhai gou, தங்களது பனி மலையும் நீரும் ஆகும். இங்குள்ள மலைகள், நீர், வனம், கற்கள் எல்லாம் கடவுளால் அளிக்கப்பட்டவை. திபெத் இன இளம் பெண் இனாமான்ஹுன் பேசுகையில், Jiu zhai gouவிலுள்ள புல், செடி, ஒவ்வொன்றையும் கவனமாக பேணிக்காக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.அனைத்துக்கும் ஆத்மா உண்டு என்று எங்கள் உள்ளூர் திபெத் இனத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மலைகள், ஆறுகள், மரங்கள் எல்லாம், கடவுளால் அளிக்கப்பட்ட அன்பளிப்புகள். மனிதகுலம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அவற்றைச் சீர்குலைக்க காரணம் ஏதுமில்லை என்றார்.


இனாமான்ஹுனும் அவரது திபெத் இனத்தவர்களும் இன்று வரையிலும் Jiu zhai gouவில் வாழ்கின்றனர். அவர்கள், மதக்கொடிகள், வெள்ளைக் கோபுரங்கள் மூலம் பயணிகளுக்கு திபெத் இன நடையுடை பாவனைகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் விரும்தோம்பல் மிக்கவர்கள். பயணிகள் திபெத் இனத்தவர்களின் வீட்டில் விருந்தினராக வெண்ணெய் தேனீரை அருந்து, பார்லி மதுவைக் குடித்துக் கொண்டே திபெத் இனத்தவர்கள் ஆடிப்பாடுவதைக் கண்டு ரசிப்பது, மகிழ்ச்சியான

ஒன்றாகும்.


Jiu zhai gouவைப் பார்வையிட்ட பின், மனித சொர்க்கத்தில் தொடர்ந்து சுற்றுலா செல்ல, கார் மூலம் ஹுவான் லுன் எனும் காட்சிப் பிரதேசத்துக்குச் செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடையில் தூரம் 130 கிலோமீட்டர் மட்டுமே. Jiu zhai gouவைப் போல, 1992ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால், ஹுவான் லுனும் உலக இயற்கை மரபுச் செல்வத்தின் பெயர்பட்டியலில் சேர்க்கப்பட்டது. நீர் என்பதே இங்குள்ள முக்கியக் காட்சியாகும்.





ஹுவான் லுனில் நீர் காட்சியைக் கண்டு ரசிக்கும் போது, மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி பார்க்க வேண்டி ஏற்பட்டது. பள்ளத்தாக்கில் சுமார் 4 கிலோமீட்டர் நீளமான மெல்லிய மஞ்சள் நிறத் தரையில் 3000க்கும் அதிகமான குளங்கள் இருக்கின்றன. படி வயல் போல் அவை காணப்படுகின்றன. சூரிய ஒளியில் அவை மின்னி ஒளி வீசுகின்றன.

Thursday, February 01, 2007

<>சீன வானொலியின் புதிய தமிழ் நிகழ்ச்சி நிரல்<>


(புதிய நிகழ்ச்சி நிரல் (2007,பிப்.1முதல்
இந்த நிகழ்ச்சி
நிரல் செயல்பாட்டுக்குவர உள்ளது)


<>நிகழ்ச்சி நிரல்<>
*********
திங்கள் :- செய்திகள், செய்தித் தொகுப்பு
மக்கள் சீனம், நட்பு பாலம்,
சீன வரலாற்றின் சுவடுகள்,
சீன உணவு அரங்கம்.



செவ்வாய் :- செய்திகள், செய்தித் தொகுப்பு,
சீனாவில் இன்ப பயணம், சீனப்
பண்பாடு அல்லது சீனக் கதை,

நேருக்கு நேர், தமிழ் மூலம் சீனம்.

புதன் :- செய்திகள், செய்தித் தொகுப்பு
கேள்வியும் பதிலும், மலர்ச்
சோலை, நேயர் நேரம்.


வியாழன் :- செய்திகள், செய்தித் தொகுப்பு,
அறிவியல் உலகம், நலவாழ்வுப்
பாதுகாப்பு, இசை, தமிழ் மூலம் சீனம்.


வெள்ளி :- செய்திகள், செய்தித் தொகுப்பு, சீன
சமூக வாழ்வு அல்லது சீன மகளிர், தமிழ்
மூலம் சீனம், உங்கள் குரல்.


சனி :- செய்திகள், சீனத் தேசிய இனக் குடும்பம்,
நேயர் கடிதம், இசை நிகழ்ச்சி, தமிழ் மூலம்
சீனம்.

ஞாயிறு :- செய்திகள், விளையாட்டுச் செய்திகள்,
நேயர் கடிதம்,நேயர் விருப்பம்.