Sunday, May 28, 2006

நிலத் தோற்றமும் நிலவமைப்பும்

<>நிலத் தோற்றமும் நிலவமைப்பும்<>

மலைகள் நிறைந்த நாடு சீனா. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மலைப் பிரதேசத்தின் பரப்பளவு 3ல் 2 பகுதியாகும்.

மலைப் பிரதேசம் குன்றுப் பிரதேசம் பீடபூமிகள் ஆகியவை இதில் அடங்குகின்றன. நாட்டி பல்வேறு நிலவமைப்புகளில் மலைப் பிரதேசம் 33 விழுக்காடும் பீடபூமி 26 விழுக்காடும் வடி நிலம் 19 கிழுக்காடும் சமவெளி 12 விழுக்காடும் குன்றுகள் 10 விழுக்காடும் வகிக்கின்றன.

இலட்சகணக்கான ஆண்டுகளுக்கு முன் சிங்காய்-திபெத் பீடபூமி மேலோங்கி எழுந்துள்ளது. பூகோளத்தின் வரலாற்றில் உருவான நில மேலோட்டின் இயக்கத்தினால் சீனாவின் நிலத் தோற்றம் உருவாயிற்று.

ஆகாயத்திலிருந்து சீனாவின் நிலத்தைப் பார்த்தால் அது படிக்கட்டு போல மேற்கிலிருந்து கிழக்காகப் படிப்படியாக கீழ் நோக்கி இறங்குகின்றது.
இந்தியத் துணைக் கண்டமும் ஐரோப்பிய ஆசிய கண்டமும் மோதுவதால் சிங்காய்-திபெத் பீடபூமி இடைவியாமல் மேலோங்கி வளர்கின்றது.

அது கடல் மடத்திலிருந்து சுமார் 4 ஆயிரம் மீட்டர் உயரமுடையது.
“உலகின் கூரை”எனவும் அது அழைக்கப்படுகின்றது. இது சீனாவின் நிலவமைப்பின் முதலாவது படிக்கட்டாகத் திகழ்கின்றது.

பீடபூமியில் உள்ள இமயமலையின் முக்கிய மலைச் சிகரமான
ஜொல்மோ லுங்மா(எவஹஸ்ட்)8848.13 மீட்டர் உயரமுடையது.
அது உலகில் மிக உயர்ந்த மலைச்சிகரமாகும்.

உள் மங்கோலிய பீடபூமி லோயெஸ் பீடபூமி யுன்னான் குய்ச்சோ பீடபூமி தலிம் வடிநிலம் செங்கல் வடிநிலம் சுசுவான் வடிநிலம் ஆகியவை சீனாவின் இரண்டாவது படிக்கட்டாக அமைகின்றது.

இவை கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1000-2000 மீட்டர் உயரத்தில் உள்ளன. இதன் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ள பெரிய சின் அன் மலைகள், தைய்ஹொன் மலைகள், ஊ சான் மலைகள், சியூ பொங் மலைகள் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு நோக்கி பசிபிக்மாக் கடல் கரையோரம் வரையான பகுதி அதன் மூன்றாவது படிக்கட்டாகும்.

இதன் நிலவமைப்பு கடல் மட்டத்திலிருந்து 500-1000 மீட்டர் உயரம் உடையது. வடக்கிலிருந்து தெற்காக வடகிழக்கு-சீன சமவெளி, வட சீன சமவெளி, யாங்சி ஆற்றின் நடுத்தர மற்றும் கீழ்ப் பகுதி சமவெளி இச்சமவெகளின் அருகில் தாழ்வான மலைகளும் குன்றுகளும் பரந்து கிடக்கின்றன.

மேலும் கிழக்கு நோக்கிச் சென்றால் சீனாவின் பெருங்கண்டக் கடல் திட்டில் அமைந்துள்ள ஆழமற்ற கடல் பிரதேசத்தைக் காணலாம். 4 படிக்கட்டாக விளங்கும் இப்பிரதேசத்தின் நீர் ஆழம் 200 மீட்டர் மட்டுமே.

No comments: