Tuesday, May 30, 2006

தமிழ் மூலம் சீன மொழி கற்க



<>தமிழ் மூலம் சீனம்<>

பாடம் 1

சீன மொழி பல்லாயிரம் ஆண்டு வரலாறுடையது.

உலகில் கோடானுகோடி மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

உலகில் நால்வரில் ஒருவர் சீனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகமான வெளிநாட்டவர் சீனாவுக்கு வந்து பயணம் மேற்கொள்கின்றனர் அல்லது வணிகம் செய்கின்றனர்.

சீன மொழி கற்க, இங்கு வருகை தரும் தமிழர்களை வரவேற்கின்றோம்.

முதலாவது பாடம்.


தலைப்பு 问 候 (WEN HOU) வென் ஹவ்.....என்பதாகும்.

தமிழ் மொழியில் வணக்கம் தெரிவிப்பது என்று பொருள்.

சீன வழக்கத்தின் படி, இருவர் சந்திக்கும் போது,

ஒருவருக்கொருவர்你好(NI HAO) நி ஹெள... என்று கூறுவர்.

你 (NI) நி.... என்றால் தமிழில் (நீ) என்பது பொருள்.

好 (HAO)ஹெள.... என்றால் நன்று என்று பொருள்.

இதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எவரும் பயன்படுத்தலாம்.

你好 (NI HAO)நி ஹெள என்று ஒருவருக்குச் சொல்லும் போது,

எதிர் தரப்பினரும் 你好(NI HAO) நி ஹெள.... என்று பதிலளிப்பார்.

தமிழரும் இப்படி தானே?

இருவர் சந்திக்கும் போது, பரஸ்பரம் வணக்கம் தெரிவிப்பது வழக்கம் அல்லவா?

இப்பொழுது நீங்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்,

你好 (NI HAO) நி ஹெள......

சீன மக்கள் காலத்தை குறிப்பிட்டு வணக்கம் தெரிவிப்பது உண்டு.

எடுத்துக்காட்டாக, காலையில் 早上好 (ZAO SHANG HAO)என்று கூறுவர்.

தெள ஷாங் ஹெள.........

早上 (ZAO SHANG)

தெள ஷாங் ஹெள.....என்றால் காலை என்பது பொருள்.


இப்பொழுது எங்களுடன் சேர்ந்து படியுங்கள். 早上好(ZAO SHANG HAO)

தெள ஷாங் ஹெள......!


முற்பகல் 上午好 (SHANG WU HAO) ஷாங் வு ஹெள என்று கூறுவர். 上午

(SHANG WU) ஷாங் வு...... என்றால் முற்பகலைக் குறிக்கும்.


இப்பொழுது எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.


上午好 (SHANG WU HAO) ஷாங் வு ஹெள...!


இப்பொழுது மீண்டும் படிப்போம். ஷாங் வு ஹெள...!


முதலில் 你好(NI HAO) என்பதை படிக்கின்றோம்.


你好(NI HAO) நி ஹெள...!


இதில் 你(NI), 好(HAO), ஆகிய இரண்டு சொற்கள் நமக்குத் தெரியும்.


அடுத்து, 早上好(ZAO SHANG HAO) என்பதைப் படிக்கின்றோம்.

தெள ஷாங் ஹெள


早上好(ZAO SHANG HAO): இதில் 早上(ZAO SHANG) என்பது நமக்குப் புரிகிறது.


இனி,上午好(SHANG WU HAO) என்பதைப் படிக்கின்றோம், 上午好(SHANGWU HAO): ஷாங் வு ஹெள...!இதில் 上午(SHANGWU) என்பதை தெரிந்து கொண்டோம்.


ஆக, இன்று 4 சொற்களைத் தெரிந்துகொண்டோம்.

அவை, 你(NI)-நீ

好(HAO)-ஹவ்-நன்று

早上(ZAO SHANG)-தெள ஷாங் - காலை

上午(SHANG WU)-ஷாங் வு - முற்பகல்

இந்த 4 சொற்களும், உங்கள் மனதில் பதிந்திருக்கின்றனவா.

பாடத்துக்குப் பின் அதிக முறை பயிற்சி செய்யுங்கள்.

இந்த நிகழ்ச்சி பற்றி யோசனை தெரிவிக்க விரும்பினால் விண்ணஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தாராளமாகத் தெரிவியுங்கள். மீண்டும் சந்திப்போம்.

மின்னஞ்சல் :- tamil@cri.com.cn

விண்ணஞ்சல் :-

China Radio International.

16A Shijingshan Road, Beijing, China. 100040

<> CRI. All Rights Reserved <> தொடரும்.....

No comments: